Mar 25, 2014

முன்னாள் காதலிகள்

அடிக்கடி கீழ்வரும் கான்செப்டில் ஸ்டேட்டஸ் அல்லது கதை கண்ணில் படுகிறது: கதாநாயகன் ஊருக்கோ, எங்கேயோ போகும்போது வெகு நாட்கள் கழித்து தற்செயலாகவோ வேண்டுமென்றேவோ தான் ஒரு தலையாகவோ அல்லது பரஸ்பரமாகவோ காதலித்த நபரை பார்க்கிறார் (பெண்தான்). உடனே தனது பழைய நினைவுகளில் மூழ்குகிறார். அந்த பெண் நபரின் செழுமையான வாழ்வை, அவளின் கனவுகளை, ஆசைகளை நினைத்துபார்க்கிறார். அதை கம்பேர் செய்து அவளின் தற்போதைய நிலையை நோக்குகிறார். அந்த பெண் நபரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனது கண்றாவியான வாழ்க்கையை கதாநாயகனுக்கு தெரியப்படுத்தி...
முழுதும் படிக்க..

Mar 22, 2014

ஏழு தலைமுறைகள்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரை. அங்கு செல்ல..) கருப்பென்றால் தாழ்ச்சி, அசிங்கம், கருப்பர்களுக்கு எதுவும் தெரியாது, காட்டுமிராண்டிகள் போன்ற கருதுகோள்கள் நம்மிடையே வெகு பிரபலம். இத்தகைய கருத்துக்கள் எப்படி உருவாகின, யார் உருவாக்கியது, ஏன் அவை வெள்ளையர்களுக்கு மிக முக்கியமாக இருந்தன? கருப்பர்களை வெறும் உடைமையாக, செருப்பு பழசாகிடுச்சு, தூக்கி போட்டுட்டு வேற வாங்கணும் என்பது மாதிரி மட்டும் எப்படி...
முழுதும் படிக்க..

Mar 20, 2014

பிட்காயின் – பரிணாமமா, பரிநாமமா?

ஆழம் இதழில் வெளிவந்த பிட்காயின் பற்றிய அறிமுகக்கட்டுரை.. அங்கு செல்ல (சுருக்கப்படாத வடிவம் கீழே) அஸ்ஸாமில் கிட்டத்தட்ட அறுநூறு ஆண்டுகளாக பண்டமாற்று முறையில் நடைபெறும் ஒரு சந்தையும், அதை தக்கவைத்திருக்கும் பழங்குடிகளையும் பற்றிய செய்தி நிஜமாகவே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.பணம் என்கிற வஸ்து தோன்றுவதற்கு முன் இருந்த நடைமுறை! தானியங்கள், கால்நடைகள், உலோகங்கள் என்று பண்டமாற்றிக்கொண்டு வளர்ந்த பொருளாதாரத்தில், பணம் என்கிற விஷயம் கண்டுபிடிக்கப்பட்டதும் மாற்றுமுறை ஒரு ஸ்திரத்தன்மையை அடைந்தது. பல நூற்றாண்டுகளாக...
முழுதும் படிக்க..

Mar 9, 2014

கிராவிட்டி - ஈர்த்தது ஏன்?

"விமர்சனம் எழுதி என்ன செய்யப்போகிறோம்? சும்மாவே இருக்கலாம். சும்மா இருந்து என்ன செய்யபோகிறோம்? விமர்சனம் செய்யலாம்" எனது திரைப்படப் பார்வைகளை தொடர்ந்து வாசித்து வரும் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும், நான் படத்தின் கதையினை விவரிப்பதில்லை. படத்தில் என்னை கவர்ந்தவற்றை பற்றி மட்டுமே சிலாகிப்பது வழக்கம். இந்த படம் என்னை ரொம்பவே 'ஈர்த்துவிட்டது'. விண்வெளி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருக்கும் ஒரு சிறுவனுக்குரிய ஆர்வமும் ஒரு காரணம். *கதை உண்டு, விருப்பமில்லையேல் மேலே படிக்க வேண்டாம்* 'என்னை எல்லாருக்கும்...
முழுதும் படிக்க..

Mar 8, 2014

சன்னு குட்டியின் டெடி பொம்மை

சன்னு குட்டி பள்ளிக்கூடத்துக்கு பாட்டி கூட ஆட்டோல டுர்ர்ர்னு போயிட்டு இருந்தான். வழில வர்ற கடை, குளம்னு வேடிக்கை பாத்துட்டே வந்தான். அப்போ திடீர்னு ஆட்டோ பக்கத்துல ரெண்டு காக்கா பறந்து வந்து 'சன்னு குட்டி நில்லு நில்லு'னு கத்துச்சாம். ஆட்டோ அண்ணா கிட்ட வண்டிய நிறுத்தச்சொல்லிட்டு சன்னு கேட்டானாம் 'என்ன காக்கா எதுக்கு பள்ளிக்கு போகும் போது நிக்கச்சொல்ற? நேரம் ஆகுதுல்ல? சீக்கிரம் சொல்லு'. அதுக்கு காக்கா சொல்லுச்சாம்.. 'நம்ம டெடி பேர் வீட்டுல யார்கிட்டயும் சொல்லாம வெளில வந்துச்சு, அத நரி...
முழுதும் படிக்க..