365 நாள் பிராஜக்டுகள் என்றழைக்கப்படும் பதிவுகள் வலையில் ஏற்கனவே பிரபலம். ஏதாவது தலைப்பை தேர்ந்தெடுத்து, அது குறித்து தினம் ஒரு பதிவு போடுவது அதன் தார்ப்பாய் (தாத்பரியம்).
அன்றன்றைய தினத்தில் 'கவர்ந்த விஷயம்' (கவி) ஒன்றை பற்றி எழுதலாம் என்று எனக்கு ஒரு எண்ணம். இந்த பிராஜக்ட் ஆரம்பிக்க ஒரு முக்கிய காரணம், ஜனவரி ஒன்று. வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கக்கூடிய 365 பிராஜக்டை கழுதைய புத்தாண்டு வந்து விட்டதே என்கிற காரணத்திற்காக நானும் ஆரம்பிக்கிறேன். எனக்கு தெரிந்து லதாமகனும், கருப்பையாவும் இரண்டு புதிய முன்னூற்று அறுபத்தைந்தை ஆரம்பிக்கிறார்கள் - இரண்டுமே கவிதைகள் பற்றி!
பொதுவாக இப்படி பிராஜக்டுகள் தனி வலைத்தளத்தில் ஆரம்பிக்கப்படுகிறது. சும்மா இருக்கும் கொத்து பரோட்டா துருப்பிடிக்காமல் இருக்க, இதிலேயே என்னுடைய முன்னூற்று அறுபத்தைந்தை எழுதுகிறேன். 'கவர்ந்த விஷயம்' என்கிற தலைப்பை நான் தேர்ந்தெடுக்க 'முக்கிய' காரணம், ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் எழுதுவதெல்லாம் ரொம்ப கஷ்டம் ப்ரோ. இப்படி பொதுவான தலைப்பாக இருந்தால் சுலபமாக ஜல்லியடிக்கலாம். மேலும் எதிலும் கமிட் ஆவதே எனக்கு ஒவ்வாததால், இந்த பதிவுகள் எல்லாம் ஒரு மாதத்துக்கு மேல் தாண்டுகிறதா, பார்ப்போம். இத்தனை கஷ்டப்பட்டு இதை எழுதியே ஆகணுமா என்று நினைப்பவர்களுக்கு - தினம் மார்ச் பாஸ்ட் செய்து கட்டுக்கோப்பாக இருக்கும் ராணுவத்தை போல் இதில் கிடைக்கும் நன்மைகள் பல; என்பது இப்படி பதிவிடுகிறவர்களின் அபிப்ராயம். செய்துதான் பார்ப்போமே?
இன்றைக்கு கவர்ந்த விஷயம் இந்த 365 நாள் பிராஜக்டுகள் தான். இன்னிக்கு கோட்டா ஓவர்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

2 comments:
365 நாள் ப்ராஜெக்ட் என சொல்லி ஆரம்பிக்கப்படும் விஷயங்கள் பொதுவாக சீக்கிரமே நின்றுவிடும் அபாயம் உண்டு... குறிப்பாக பதிவுலகில் நிறைய பார்த்திருக்கிறோம்... நீங்கள் அந்த மாதிரி நிறுத்திவிட மாட்டீர்கள் என நம்புகிறேன் :)
நானும் அப்படிதான் நினைக்கிறேன் :) (பாதில நிறுத்திடுவேனோனு).. விடக்கூடாது...
Post a Comment