Jan 18, 2014

தமிழகத்தில் தேவதாசிகள்

முனைவர் சதாசிவத்தின் பல்லாண்டு ஆய்வின் பயனாக வந்திருக்கிறது 'தமிழகத்தில் தேவதாசிகள்' புத்தகம். இந்த தலைப்பில் இதுவரை இத்தனை முழுமையான புத்தகம் வந்ததில்லை என்று சொல்லப்படுகிறது. ஆங்கிலத்தில் பல ஆண்டுகள் முன்னமேயே வெளிவந்திருந்த இந்த புத்தகத்தை இந்த ஆண்டு அகநி பதிப்பகம் தமிழில் வெளியிடுகிறது. தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்திருப்பவர் கமலாலயன்.

தேவதாசி முறையின் தோற்றம், வளர்ச்சி, அதன் கோல்டன் பீரியட், பின்பு அதன் சரிவு (கிருஷ்ணதேவராயர் ஆட்சியின் கடைசியில்), அதன் சமூக (முக்கியமாக கலை சார்ந்த) பங்களிப்பு என்று ஏராளமான தகவல்களைக் காண முடிகிறது. அவர்களை குறிப்பிடும் வார்த்தைகள் பின்னாட்களில் வசைச்சொல்லாக மாறும் என்று அந்நிறுவனம் செழித்திருந்த காலத்தில் சொல்லியிருந்தால் தேவர் அடியார்கள் சிரித்திருப்பார்கள். அப்படி ஒரு வாழ்க்கை!



உலகம் முழுக்க, இந்தியா முழுக்க, பல மதங்களில் கோவிலுக்காகவே நேர்ந்து விடும் வழக்கம் பல வாரியாக இருந்து வந்திருக்கிறது என்பது எனக்கு புதிய தகவல். மொகஞ்சதாரோ காலத்திலேயே இந்த வழக்கம் இருந்திருக்கக்கூடும் (நடனப்பெண்ணின் சிலை) என்பதை படிக்கும்போது, கிட்டத்தட்ட வழிபாடு தோன்றிய காலந்தொட்டே இந்த வழக்கம் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

முழுக்க படித்துவிட்டு விலாவாரியாக எழுதுகிறேன். சுவாரசியமாக போகிறது.

தமிழகத்தில் தேவதாசிகள், முனைவர் கே.சதாசிவன்
தமிழில்: கமலாலயன்
அகநி வெளியீடு (ஸ்டால் எண்: 277)
Rs. 300/-

18/365


2 comments:

viyasan said...

இந்தப் புத்தகத்தை இணையவழியாக வாங்க முடியுமா. உங்களிடம் அந்த இணையமுகவரி இருந்தால் தரவும். நன்றி.

Prasanna said...

இதுவரை தெரியவில்லை. விசாரித்து சொல்கிறேன்.. நன்றி திரு.வியாசன்!