இரண்டு செய்திகள். முதலாவது இந்தியா ஏவப்போகும் ஜிஎஸ்எல்வி. சொன்னதை அப்படியே கேட்கும் PSLV ராக்கெட் இந்தியாவிற்கு ஒரு வரப்பிரசாதம். ஆனால் PSLVயால் அதிக எடையை சுமக்க முடியாது. இரண்டு டன்னுக்கும் அதிகமான சுமையை தூக்கிச்செல்ல வலுவான ஒரு ராக்கெட் தேவை. அதை பூர்த்தி செய்யவே ஜிஎஸ்எல்வி உருவாக்கப்படுகிறது. ஆனால் கடந்த இரண்டு தடவையுமே ஜிஎஸ்எல்வி சிறிது மக்கர் செய்துவிட்டது. இந்தியா சொந்தமாக தயாரித்த சிக்கலான கிரையோஜெனிக் என்ஜின் ஜிஎஸ்எல்வி-யின் ஹைலைட். இந்த புதிய ராக்கெட்டை கொண்டுதான் சந்திராயன்-2 போன்ற எதிர்கால விண்கலன்களை ஏவ முடியும். அதனால் இஸ்ரோவிற்கு இதை சாத்தியப்படுத்தயே ஆக வேண்டிய கட்டாயம். இன்று மாலை நான்கரை மணி வாக்கில் இதன் முடிவு தெரிந்துவிடும்.
5/365
இரண்டாவது மாவோவின் கொள்கைகளால் சீனாவில் 1960 வாக்கில் நடந்த அழிவுகள் பற்றிய ஒரு செய்தி. இந்த பின்புலன் மற்றும் அதற்கு பிறகு நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட Wolf Totem நாவலையும், அந்த காலக்கட்ட வரலாற்றையும் படிக்க ஆவல் கூடியுள்ளது. Wolf Totem ஓநாய் குலச்சின்னம் என்று மொழிபெயர்க்கப்பட்டு தமிழிலும் கிடைக்கிறது (சி.மோகன், நற்றிணை). கம்யூனிசம் சார்ந்த வரலாற்றை எப்போதும் ஒரு வித வெறுப்போடு அணுகும் இன்றைய சூழலுக்காகவே அப்போது நடந்த சம்பவங்களையும், மாவோ மூலம் கிடைத்த நன்மைகளையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகமாகிறது.
5/365
No comments:
Post a Comment