'வெளியூரில் இருந்து வர முடியாதவர்கள் பேஸ்புக் வழியாக இறுதி சடங்கை காண்கிறார்கள்' என்கிற தகவல் கவனத்தை ஈர்த்தது. டிவியில் கேட்டது. உடனே எனக்கு எனது தாத்தாவின் இறுதி தருணங்கள் நினைவுக்கு வந்தது.
இரண்டாயிரம் வாக்கில் BSNL மற்றும் போஸ்டல் டிபார்ட்மெண்ட் வேலைநிறுத்தம் செய்திருந்த சமயம். திடீரென்று தாத்தாவுக்கு சீரியசாகி அவர் மகனுக்கு (என் அப்பா) தகவல் அளிக்க ஊரில் இருந்து பல்வேறு வழிகளில் முயல்கிறார்கள். எதிலும் பிடிக்கமுடியவில்லை. தாத்தா வேறு தன் மகனை பார்க்க வேண்டும் என்று ரொம்ப புலம்பியிருக்கிறார். கடைசியில் எப்படியோ ஒரு தந்தி வந்து சேர்ந்து நாங்கள் போய் சேருவதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.
ஒரு வேளை அப்போது பேஸ்புக், ஸ்கைப் எல்லாம் இருந்திருந்தால் போவதற்கு முன் வீடியோ கால் செய்து பேசியிருப்போமா?
சந்தேகம்தான்.
4/365

No comments:
Post a Comment