விடாமல் ஹாரன் அடிப்பவர்களை அவர்களுக்கே பிடிக்குமா தெரியவில்லை. ஆனாலும் ராஜ் டிவி விளம்பரம் போல் நிறுத்தாமல் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி செய்பவர்கள் பெரும்பாலும் சுமோ சைஸ் வண்டி அல்லது டேக்சிதான். இப்படி செய்பவர்களுக்கு வேண்டுமென்றே வழி விடாமல் இருப்பது (பெரிய ஆம்புலன்ஸ்னு நினைப்பு), அவர்களை முன்னாள் விட்டு பின்னால் சென்று அவர்கள் காதருகில் பாண் பாண் என்று ஹாரன் அடித்து பழி வாங்குவது போன்ற பொதுச்சேவைகளில் நான் அடிக்கடி ஈடுபடுவது வழக்கம். ரொம்ப அநியாயமாக சத்தம் போட்டால் போய் 'ஏன் இப்படி பண்றீங்க?' என்று கேட்டுக்கூட விடுவது.
இன்று இரவு அலுவலகத்திலிருந்து வரும்போது ஒரு கேஸ் மாட்டியது. சுமோவேதான். ஒரே ஒரு செகண்ட் கூட நிறுத்தாமல் ஹாரனில் அலறிக்கொண்டே முன்னேறினார்கள். அது அநியாயம் கூட இல்லை. அராஜகம் கேட்டகிரி. இவர்களுக்கு எப்படியாவது பாடம் கற்பிக்க வேண்டுமென்று ட்ராபிக்கில் சிரமப்பட்டு அவர்கள் அருகில் நெருங்கி ஜன்னலில் எட்டி பார்த்தேன். ஆறு பேர். முரட்டுத்தனமாக உட்கார்ந்து கிடந்தார்கள்.
'ஏய்ய்' என்று உச்ச ஸ்தாதியில் ஆரம்பித்தேன்.
ஆறு பேரும் போட்டிருந்தது காக்கிச்சட்டை.
'ஏய்ய் ஹா ஏய்ய், அட டியோ டியோ டோலே' - இந்த பாடலை இன்று யாரோ ஒருவன் பைக்கில் பாடிக்கொண்டே போவதை நீங்கள் யாராவது பார்த்திருந்தால், அது நான்தான்! ஹாய்!
20/365

No comments:
Post a Comment