Jan 3, 2014

மறக்காத ஒரு கனவு

கதை சொல்வது போல் ஆரம்பமாகும் பாடல்கள் எப்போதுமே எளிதில் கவர்ந்து விடுகின்றன
"ஒரு மலையோரம் 
அங்கு கொஞ்சம் மேகம், 
அதன் அடிவாரம் ஒரு வீடு" 
என்கிற அவன்-இவன் பாடல் மாதிரி.

'தற்செயலாக' இன்றும் 'ஒரு நாள் ஒரு கனவு, அதை மறக்கவும் முடியாது' பாடலை கேட்க வேண்டியதாகிவிட்டது. கண்ணுக்குள் நிலவு என்கிற பாசில் படம். பாசில் படம் என்றதும் மப்பும் மந்தாரமுமான மாலை மஞ்சள் நினைவுக்கு வருகிறதே, ஏன்?

ஆனால் ஒன்று. குழந்தையின் கன்னம் போன்ற மென்மையை இசையில் வடித்தால் ஒரு நாள் ஒரு கனவு பாடல் போல்தான் இருக்கும். மென்மைக்கு காரணம் இசையா, வரிகளா? இந்தளவிற்கு ஒரு மேகத்தொடுதலை 'பூவே செம்பூவே' போன்ற பாடல்களில் அனுபவித்ததுண்டு.

தெரிந்துவிட்டது. அந்தளவு மிருதுத்தன்மை கூடி வர காரணம் அப்பாடல்களை பாடிய ஜேசுதாஸ்!

3/365



2 comments:

Philosophy Prabhakaran said...

ஜேசுதாஸுக்காக நிறைய நாத்திகர்கள், மாற்று மதத்தினர் சபரிமலை பாடலை விரும்பிக் கேட்கின்றனர்...

தற்சமயம் மது பாலகிருஷ்ணன் என்றொரு பாடகர் இருக்கிறார்... அவருடைய குரல் கூட ஜேசுதாஸ் சாயலில் இருக்கும்... கேட்டுப் பாருங்கள்...

Prasanna said...

உண்மைதான். இந்த தலைமுறையில் மது பாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ் போன்றவர்கள் அதற்கருகில் வருகிறார்கள்.
மதுவின் 'எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ' என்கிற பாரதி படப்பாடல் ரொம்பப்பிடிக்கும். இவர் குரல் ரொம்ப பிடித்துதான் செல்வா இரண்டாம் உலகத்தில் ஹீரோவின் பெயரை மது பாலகிருஷ்ணன் என்று வைத்துவிட்டாரோ என்னமோ?