சின்ன வயதில் வேகமாக, கோர்வையாக படிக்க வராது என்பதால் அம்மாவை படிக்கச்சொல்லி நானும் அக்காவும் கேட்பதுண்டு. அதில் ஒரு கதையில் கபாலீசுவரி என்கிற வில்லி கதாபாத்திரம் இன்றும் நினைவிருக்கிறது. கபாலீசுவரியை இன்னும் பயங்கரமானவராக ஆக்கி அவளுக்கு பாலீசுவரி என்று பெயர் வைத்து ஒரு கதை எழுதினேன் (நான்காவதில்). அதை ஐந்தாவது படிக்கும்போது நீட்டு பேப்பரில் 'அழகாக' எழுதி கோகுலம் இதழுக்கு அனுப்பி வைத்தேன். அதை அவர்களும் பிரசுரித்து இதழையும் அனுப்பிவிட, அன்று முழுக்க ஒரு இடத்தில் நிற்கவே முடியவில்லை. முதல் பிரசுரம்! அதற்கு சன்மானமாக அவர்கள் அனுப்பிய மணியார்டர் தான் எனது முதல் சம்பாத்தியம். அந்த கிளுகிளுப்பு இன்றும் அப்படியே மனத்தில் உண்டு!
குழந்தை இலக்கியத்திற்கு ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று தேடும்போது கீழ்கண்ட கட்டுரைகள் தென்பட்டது. உங்களுக்கும் உதவக்கூடும். இந்த தலைப்பில் புதிய உபயோகமான தரவுகள் கிடைக்க கிடைக்க இங்கு சேர்த்துக்கொண்டே இருக்கப்போகிறேன்.
ச.தமிழ்ச்செல்வன்
பா.ராகவன்
இப்போதைக்கு இந்த வகை எழுத்து பற்றி சில குறிப்புகள் -
எளிமையாக, சுவாரசியமாக, தகவல் பிழையில்லாமல் இருக்க வேண்டும். அனைத்து தரப்பு குழந்தைகளையும் மனதில் வைத்து எழுதப்பட வேண்டும். நீதி சொல்லக்கூடாது (நம்மள நல்லா ஏமாத்திட்டாங்க). குழந்தைகளின் வயதை தீர்மானித்து அதற்கேற்றவாறு கதையை அமைக்க வேண்டும். வாசிப்பவர்களை கதையில் ஒன்ற வைத்து அவர்களுக்கு கதையின் மீது ஒரு ஆதிக்கத்தை அளிக்க வேண்டும். கதையின் போக்கிலேயே செய்திகளை அறிய வைக்க வேண்டும். விளக்கக்கூடாது.
..தொடரும்..
26/365

2 comments:
குடோஸ் பிரசன்னா... நம்மாளு அதிஷா கூட சில கதைகள் எழுதியிருக்கார் என்று நினைக்கிறேன்...
நன்றி பிரபா! ஆமாம் அவர் தளத்தில் படித்தேன். விழியன் கூட பேஸ்புக்கில் குழந்தைகள் மற்றும் சிறுவர் இலக்கியத்தின் வித்தியாசங்களை பகிர்ந்திருந்தார். கண்டுபிடிக்க முடியவில்லை
Post a Comment