Jan 31, 2014

கற்றதும் பெற்றதும்

இந்த தொடர் இன்றுடன் நிறைவடைகிறது (நிம்மதி பெருமூச்சை கொஞ்சம் அமைதியாக விடலாமே?).  எழுதிய முப்பத்தியோரு நாட்களில், இருபது நாட்கள் நிறுத்திவிடலாமா என்று யோசித்துக்கொண்டே போட்டதுதான். இருந்தாலும் ஒரு மாதத்துக்கு மேல் தாண்டுகிறதா, பார்ப்போம் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்ட ஒரே காரணத்திற்காக எப்படியாவது ஒரு மாதமாவது பதிவிட வேண்டும் என்று தொடர்ந்து இதுவரை வந்தாகிவிட்டது. இது புதுவித அனுபவம். எத்தகைய பதிவுகள் அதிகம் ரசிக்கப்படுகின்றன என்பது முதற்கொண்டு இதில் கற்றதும் பெற்றதும்...
முழுதும் படிக்க..

Jan 30, 2014

இன்னொரு டில்பர்ட்

இப்போ பேசு இப்போ பேசு :) நன்றி: http://www.dilbert.com/ 30/365...
முழுதும் படிக்க..

Jan 29, 2014

மகாபாரதம்

மெயின் கதைச்சுருக்கத்தை கேட்கும்போதே அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது மகாபாரதம். நாங்கல்லாம் அப்பவே அப்படி என்று பிதற்றாமல், என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை நுட்பமாக பிரித்தறிந்து, நூற்றாண்டுகளுக்கு முன்பான மக்களை பற்றி, மானுடத்தை பற்றி, நம்மை பற்றியே கூட, அறிந்து கொள்ள முற்படலாம். கீழ்கண்ட குடும்ப மரம் புதிதாக ஆரம்பிப்பவர்களுக்கு (தொலைக்காட்சியோ, வெண்முரசோ, மூலமோ எதோ ஒன்று) உதவக்கூடும். (தேடிய...
முழுதும் படிக்க..

Jan 28, 2014

சில நேரங்களில் சில மனிதர்கள்

ஒரு வீடு ஒரு மனிதன்... படித்துவிட்டு உடனே இதை ஆரம்பித்தேன். இரண்டும் இரண்டு extreme! உக்கிரமான நாவல் இது. அக்னிபிரவேசம் என்ற சிறுகதை முதலில் எழுதி அது சர்ச்சையாகி பின் அதை அடிப்படையாக வைத்து ஜெயகாந்தன் எழுதிய நாவல். இதே விஷயம் ஆட்டோ பிக்ஷன் அது இது என்கிறார்களே, அது போல நாவலில் RKV என்ற எழுத்தாளர் எழுதுவதாக வருகிறது (இதை படமாக எடுத்தபோது இந்த பாத்திரத்தில் நடித்தவர் நாகேஷ். இயக்குனர் பீம்சிங் ஜெயகாந்தனை ஓட்டியிருக்க வாய்ப்புகள் குறைவு) . கங்காவின் வெறுமைதான் கதை. தனிமையினால் வரும்...
முழுதும் படிக்க..

Jan 27, 2014

அசோகமித்திரனுக்கு வயதாகி விட்டது

வயோதிகம் என்னை பயமுறுத்துகிறது. அதைக்கண்டாலே அஞ்சி நடுங்குகிறேன். அடுத்தவர்களின் தள்ளாமையை கூட என்னால் தாங்கமுடிவதில்லை. இந்தப்படம் அந்தளவிற்கு பாதித்ததற்கு காரணம் வயதாவதன் மீதான பயம்தான் என்று நினைக்கிறேன்! அதில் எது குறிப்பாக பயமுறுத்துகிறது என்பதையும் யோசிப்பதுண்டு. நினைத்ததை செய்ய முடியாமல் இருக்கும் நிலையா? அடுத்தவர்களை சார்ந்து இருப்பதா? தள்ளாமையா? இல்லாமலாதல் பற்றிய பயமா? தெரியவில்லை. இன்று...
முழுதும் படிக்க..

குழந்தைகள் இலக்கியம்

சின்ன வயதில் வேகமாக, கோர்வையாக படிக்க வராது என்பதால் அம்மாவை படிக்கச்சொல்லி நானும் அக்காவும் கேட்பதுண்டு. அதில் ஒரு கதையில் கபாலீசுவரி என்கிற வில்லி கதாபாத்திரம் இன்றும் நினைவிருக்கிறது. கபாலீசுவரியை இன்னும் பயங்கரமானவராக ஆக்கி அவளுக்கு பாலீசுவரி என்று பெயர் வைத்து ஒரு கதை எழுதினேன் (நான்காவதில்). அதை ஐந்தாவது படிக்கும்போது நீட்டு பேப்பரில் 'அழகாக' எழுதி கோகுலம் இதழுக்கு அனுப்பி வைத்தேன். அதை அவர்களும் பிரசுரித்து இதழையும் அனுப்பிவிட, அன்று முழுக்க ஒரு இடத்தில் நிற்கவே முடியவில்லை....
முழுதும் படிக்க..

Jan 26, 2014

அ.முத்துலிங்கமும் பத்மினியும்

விகடன் மேடையில் அ.முத்துலிங்கத்திடம் ஒரு கேள்வி. 'பத்மினி பற்றி எழுதும்போது மட்டும் காதல் ததும்புகிறதே, என்ன சங்கதி?' என்று. அவருக்கே உரிய பாணியில் சுவாரசியமாக அவருடனான நினைவுகளை பகிர்ந்திருக்கிறார். அந்த பகிரலின் முழு வடிவம் இங்கே எனக்கு மிகவும் கவர்ந்தது விகடனில் இருந்த புகைப்படம் தான். அதில் பத்மினியை விட முத்துலிங்கத்தையே கவனித்தேன். எப்போதுமே (நான் பார்த்த புகைப்படங்களில்) ஒரு தீவிரத்தன்மையுடன் இருக்கும் அவரின் முகம், இதில் அவ்வளவு இளகி, நிறைவாக, சாந்தமுடன் காட்சியளிக்கிறது. முதல் கேள்விக்கு...
முழுதும் படிக்க..

Jan 25, 2014

மணல்வீடு

மணல்வீடு சிறுபத்திரிகையை வாசிக்க நேர்ந்தது. இரு மாதத்திற்கு ஒருமுறை வரும் இது கதை, கவிதை, கட்டுரை, உலக இலக்கியம் என்று ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ். அம்பையின் சிறுகதை வழக்கம் போல் எளிமை, அருமை. முரகாமியின் சிறுகதை என்று ஒரு குறுநாவல் இருக்கிறது. இனிதான் படிக்கவேண்டும். இதில் கவர்ந்தது கெட்டவார்த்தை பேசுவோம் என்கிற பெருமாள்முருகன் தொடர். ஏற்கனவே இதே பெயரில் புத்தகமும் வந்திருக்கிறது. இத்தொடர் அந்த புத்தகத்தில் உள்ளவையா அல்லது அதன் தொடர்ச்சியா தெரியவில்லை. (18+) வாயில் விழைதல் என்று ஆயிரக்கணக்கான வருடங்கள்...
முழுதும் படிக்க..

Jan 23, 2014

பனிப்புயல்

அமெரிக்காவில் தற்போது பொழிந்துகொண்டிருக்கும் பனியால் -50 டிகிரி கூட அனாயாசமாக தொடுகிறதாம் வானிலை. இதை ஒட்டி டிஸ்கவரியில் இதற்கு முன் வந்த பனிப்புயல்களால் நடந்த பாதிப்புகளை காட்டிக்கொண்டு இருந்தனர். அதீத மழை, வெயில் கூட சமாளிக்க வழி வகையாவது உண்டு. பள்ளம் ஏற்படுத்தினால் தண்ணீர் அதை நோக்கி பாயும் - ஆற்றை நோக்கி திருப்பி விடலாம். ஆனால் பனியை கையாள்வது அத்தனை சுலபம் அல்ல. காருக்குள் சிக்கிக்கொண்டவர்கள் மயிரிழையில் தப்பித்தது எல்லாம் படு த்ரில்லாக காட்டினார்கள். இவ்வளவிலும் உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு...
முழுதும் படிக்க..

Jan 22, 2014

விருமாண்டியும் ரங்கனும்

வறுமையின் நிறம் சிகப்பில் ரங்கனும் (கமல்ஹாசன்) தேவியும் (ஸ்ரீ..) பூங்காவில் நெருக்கமாக அமர்ந்திருக்கும்போது ஒருவர் எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருப்பார். கோபம் வந்த ரங்கன் அவரை போய் சப் சப்பென்று அடித்துவிடுவார். ஆனால் அவர் ஓவியம் வரையத்தான் தங்களை நோட்டம் விட்டார் என்று தெரிந்ததும் சாந்தம் (ஊமை என்பதை அறிந்து குற்றவுணர்ச்சியும்) அடைந்து  நண்பர்களாகி விடுவார்கள். கிட்டத்தட்ட அதே உருவ அமைப்பில் விருமாண்டியிலும் ஒரு ஆசிரியர் இவர்களின் நெருக்கமான தருணங்களை ஓவியமாக வரைகிறார். ஆனால் இங்கு ஓவியங்களை...
முழுதும் படிக்க..

Jan 21, 2014

பண அடிமைகள்

நாராயன் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்த இந்த கட்டுரை, பண அடிமையாகி மீண்ட ஒருவரின் வாக்குமூலம். பல தலைமுறை உட்கார்ந்து அழித்தாலும் தீராமல் இருக்குமாறு ஆயிரக்கணக்கில் மோசடியாக பணம் சேர்ப்பவர்களை பார்த்தால் 'எதற்காக இப்படி சேர்க்கிறார்கள்' என்று தோன்றும். அப்படி பண அடிமைகளை பற்றி ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிந்தது (இவர் so called legitimate வழியில் பணம் சேர்த்திருந்தாலும்). http://www.nytimes.com/2014/01/19/opinion/sunday/for-the-love-of-money.html?_r=0 என்னடா இவன் லிங்க கொடுத்து ஓப்பி அடிக்கிறான் என்று...
முழுதும் படிக்க..

Jan 20, 2014

ஹாரன்

விடாமல் ஹாரன் அடிப்பவர்களை அவர்களுக்கே பிடிக்குமா தெரியவில்லை. ஆனாலும் ராஜ் டிவி விளம்பரம் போல் நிறுத்தாமல் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி செய்பவர்கள் பெரும்பாலும் சுமோ சைஸ் வண்டி அல்லது டேக்சிதான். இப்படி செய்பவர்களுக்கு வேண்டுமென்றே வழி விடாமல் இருப்பது (பெரிய ஆம்புலன்ஸ்னு நினைப்பு), அவர்களை முன்னாள் விட்டு பின்னால் சென்று அவர்கள் காதருகில் பாண் பாண் என்று ஹாரன் அடித்து பழி வாங்குவது போன்ற பொதுச்சேவைகளில் நான் அடிக்கடி ஈடுபடுவது வழக்கம். ரொம்ப அநியாயமாக சத்தம் போட்டால் போய் 'ஏன் இப்படி...
முழுதும் படிக்க..

Jan 19, 2014

வெங்கட் பிரபு

சென்னை 28 பார்த்து விட்டு ஆகா, தமிழுக்கு ஒரு அசல் கேளிக்கைகாரர் கிடைத்துவிட்டார் என்று மகிழ்ந்திருந்தேன். முக்கிய காரணம் படத்தில் இருந்த Innocence, craft மற்றும் இயல்பான நகைச்சுவை. பாட்டி போட்டோ ஒடஞ்சிருச்சி, சில்ர இல்ல, ஜெய் எதிரி அணியை தோற்கடிக்க முனைப்பாக ஐடியா கொடுக்கும்போது அதை கவனிக்காமல் சுற்றி காமெடி செய்துகொண்டிருக்கும் நண்பர்கள், அவுட் ஆகிவிட்டு பேட் கொடுக்காமல் அழிச்சாட்டியம், பெட் மேட்ச், Rivalry, அட்டகாசமான முடிவு என்று படத்தை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். It is indeed a cult...
முழுதும் படிக்க..

Jan 18, 2014

தமிழகத்தில் தேவதாசிகள்

முனைவர் சதாசிவத்தின் பல்லாண்டு ஆய்வின் பயனாக வந்திருக்கிறது 'தமிழகத்தில் தேவதாசிகள்' புத்தகம். இந்த தலைப்பில் இதுவரை இத்தனை முழுமையான புத்தகம் வந்ததில்லை என்று சொல்லப்படுகிறது. ஆங்கிலத்தில் பல ஆண்டுகள் முன்னமேயே வெளிவந்திருந்த இந்த புத்தகத்தை இந்த ஆண்டு அகநி பதிப்பகம் தமிழில் வெளியிடுகிறது. தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்திருப்பவர் கமலாலயன். தேவதாசி முறையின் தோற்றம், வளர்ச்சி, அதன் கோல்டன் பீரியட்,...
முழுதும் படிக்க..

Jan 17, 2014

நுட்ப காமெடி

பேயோனின் இந்த இரண்டு படைப்புகளையும் இன்று காண நேரிட்டது. சிரிக்காமல் இவற்றை கடக்க வாய்ப்பு இல்லை. கம்பரசம் சாட்டையடி - இது மின் புத்தக வடிவில்.. பேயோனின் ட்ரேட்மார்க் ட்விட்டுகளின் தொகுப்பு. இவர் எனது தீவிர வாசகராக இருப்பாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம். நிறைய பேருக்கு அதே கவலை இருக்குமா? 17/365...
முழுதும் படிக்க..

Jan 16, 2014

ரோசெட்டா

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து ரோசெட்டா விழிக்கப்போகிறாள்! இன்னும் மூன்று நாட்களில். கண் விழிக்கப்போவது யாருடைய முகத்தில் தெரியுமா? பூமியெல்லாம் உருவாவதற்கு முன்னமே திரிந்து கொண்டிருந்த ஒரு வால் நட்சத்திரத்தில்! இதுவரை எந்த விண்கலமும் ஒரு வால் நட்சத்திரத்திடம் இத்தனை நெருக்கம் காட்டியதில்லை. வால் நட்சத்திரங்கள் மூலமாகவே பூமியில் உயிர்கள் தோன்ற தேவையான மூலப்பொருட்கள் கிடைத்ததாக பரவலான கருத்து உண்டு. இந்த ரோசெட்டா விண்கலம் மூலம் இந்த கருப்பொருள் கருதுகோள் பற்றி தீர்மானமாக ஒரு கருத்தை...
முழுதும் படிக்க..

Jan 15, 2014

Dilbert

டில்பர்ட் காமிக்குகள் சில சமயங்களில் வெடிச்சிரிப்பை வர வைப்பவை. இந்த இணைப்பில் இருப்பது மாதிரி. டில்பர்ட்டின் சிறப்பம்சம் அலுவலக காமெடிகளின் நுணுக்கமான வெளிப்பாடு. பாஸ் மற்றும் அல்லக்கை அலப்பறைகள், உடன் பணி புரிபவர்களின் தொல்லைகள், ஒவ்வாத மீட்டிங்குகள், அநியாய அறிவிப்புகள் என்று கிட்டத்தட்ட அனைத்துடனுமே நமது அலுவலக சூழல்களை பொருத்திக்கொள்ள முடியும். தொடரை எழுதும் ஸ்காட் ஆடம்ஸ் வாழ்வில் பல தொடர் தோல்விகளை சந்தித்தவராம். பெரும் சோகங்களை சுமப்பவர்கள் நல்ல நகைச்சுவை உணர்வோடு இருப்பதற்கு...
முழுதும் படிக்க..

Jan 14, 2014

அப்போது மட்டும் ஏன் பிடித்தது?

துப்பாக்கி படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை சின்ன வயதில் பார்த்திருந்தால் ரொம்ப பிடித்திருக்கும் என்று நிச்சயம் தெரிகிறது. ஆனால் இப்போது ஒன்ற முடியவில்லை. இப்படி சின்ன வயதில் ரொம்ப பிடித்து, பைத்தியமாக திரிந்த விஷயங்களை இப்போது யோசித்தால் 'இதற்கா இத்தனை அலப்பறை' என்றே தோன்றுகிறது. இப்படி மாறிப்போன விஷயங்கள் சில ஞாபகத்திற்கு வந்தது.. கடவுள் அமானுஷ்யம் சைக்கிள் பக்கத்து வீட்டு ரசம் சாதம் உறவினர் வீடு இராணுவம் மற்றும் லேட்டஸ்ட் தளவாடங்கள் (அமேரிக்காவோட F16 நமக்குதான்) போர் (ஏன் அடிக்கடி...
முழுதும் படிக்க..

Jan 13, 2014

நார்த் 24 காதம்

அருமையான ரோட் மூவி பார்த்து கொஞ்ச நாள் ஆகிவிட்டதே என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே, இதோ, நார்த் 24 காதம் பார்த்தாகிவிட்டது. ரோட் மூவிக்களை விரும்ப முக்கிய காரணம், அதில் இழையோடும் மனிதாபிமானம். இதிலும் அது நிரம்பவே உண்டு. பந்த் நடக்கும் நாளில் கிட்டத்தட்ட நானூறு கிலோமீட்டர் வடக்கு நோக்கி பயணிக்க வேண்டிய கட்டாயம் ரொம்ப வயதான ஒரு பெரியவருக்கு. அந்த பயணத்தில் அவருக்கு உதவும் இரண்டு பேர். அந்த மூன்று பேரும் பயணத்தில் எதை இழக்கிறார்கள், எதைப் பெறுகிறார்கள் என்பது கதை. ட்ரெயின், பேருந்து, படகு,...
முழுதும் படிக்க..

Jan 12, 2014

ஹிட்லரை சுடாமல் விட்டவர்

முதல் உலகப்போர் முடிவடையும் சமயம். ஹென்றி டாண்டே என்பவரின் படையினரிடம் சிக்கினர் ஜெர்மானிய படைவீரர்கள் சிலர். அதில் அடிபட்ட ஒரு வீரனை நோக்கி துப்பாக்கி உயர்த்தப்படுகிறது. அடிபட்டவர்கள், நிராயுதபாணிகளை கொல்லக்கூடாது என்பது யுத்த தர்மங்களில் (I hate this oxymoron) ஒன்று. கண நேரக்கருணை. துப்பாக்கி இற(ர)க்கப்படுகிறது. அந்த வீரன் தப்புகிறான். இருபத்திரண்டு வருடங்கள் கழித்து தான் தப்பிக்க விட்டது ஹிட்லர் என்பதை அறிந்து வருந்துகிறார் ஹென்றி. ஒரு துப்பாக்கி அழுத்தில் பல லட்சம் உயிர்களை காப்பாற்றியிருக்க...
முழுதும் படிக்க..

Jan 11, 2014

சிலைத் திருட்டு

தமிழகம் முழுக்க கோவில்களில் இருக்கும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள். கண்டுகொள்ள ஆள் இல்லாமல் களவு போகின்றன. கிட்டத்தட்ட அனைத்து கோவில்களும் சிலைகளும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் அவர்களிடம் கோவில்களில் இருக்கும் சிலைகளை பற்றியும், அதன் தொன்மத்தைப் பற்றியும் ஆவணங்கள் கிடையாது. சிலைத்திருடி கோடிக்கணக்கில் விற்பவர்களிடம் மட்டும் இந்த டேட்டாபேஸ் எப்படியோ இருக்கிறது போலும் (Information is wealth என்பது இவர்களுக்கு ரொம்ப பொருந்துகிறது. அவர்களை பிடித்து தகவல்களை...
முழுதும் படிக்க..

Jan 10, 2014

அராஜகக் குழந்தை

சிடின் என்பவரின் இந்த பதிவை படித்து பல இடங்களில் சிரித்தேன். குட்டி பாப்பாவின் பார்வையில் எழுதப்பட்டிருந்தாலும், குட்டியின் சேட்டையால் 'பாதிக்கப்படும்' பெற்றோரின் காண்டு பதிவு முழுக்க வழிந்தோடுகிறது :) http://www.whatay.com/blog/2014/1/5/my-baby-between-the-times-of-3-and-4-am-a-poem 10/365...
முழுதும் படிக்க..

Jan 9, 2014

பிட்டு

பிரபல பிட்டுப்பட வலைத்தளம் ஒன்று கார்டியன் செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவல்கள் நல்ல சுவாரசியம். ஐந்தாறு நாடுகள், முக்கியமாக இங்கிலாந்தை அடிப்படையாக கொண்ட தகவல்கள் என்றாலும், சில முடிவுகள் நமக்கும் பொருந்தக்கூடும். பிட்டு அதிகம் பார்க்கப்படும் நாள் திங்கள்கிழமை. ஜப்பானியர்கள் மட்டும் சனியை விரும்புகிறார்கள். நம்மூர் ஜப்பானையே பின்பற்றும் என்று நினைக்கிறேன். வேலை நாட்களில் நோ கேளிக்கை (ஆசியா டா). மாதங்களில் ஜனவரி, நவம்பர் முன்னிலை. தேடப்படும் முக்கிய வார்த்தைகள் லெஸ்பியன், டீச்சர் (!), அமெச்சூர்,...
முழுதும் படிக்க..

Jan 8, 2014

இந்தியாவில் ஜனநாயகம்

'இந்தியா மாதிரி ஒரு நாட்டில் எப்படிய்யா இன்னும் ஜனநாயகம் இருக்கிறது? வாய்ப்பே இல்லையே?'' என்று அறிஞர்கள் பலர் மண்டையை குழப்பிக்கொள்கிறார்கள்.  அதுவும் 'அமெரிக்கா போய் கூட சுலபமாக சமாளிக்கலாம், அம்ரிஸ்தர் போய் இருக்க முடியாது' எனும் அண்டை மாநிலத்தை பற்றிய அங்கலாய்ப்புகள் இருக்கும் ஒரு நாட்டில். ஏன், ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்களே அடித்துக்கொள்ளும் அளவிற்கு வேற்றுமைகள் குழம்பிக்கிடக்கும் இடத்தில்.. நம்மைப்போலவே காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று, ஜனநாயகம் ஆன நாடுகள் பல. ஆனால்...
முழுதும் படிக்க..

Jan 7, 2014

ஸ்மார்ட்போன்

நண்பர் ஒருவர் (க்ளிஷே அலர்ட்) புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை கீழே போட்டுவிட்டார். கடையில் போய் கேட்டால் சரிசெய்ய ஒன்பதாயிரம் ஆகும் என்றிருக்கிறார்கள். மொபைல் விலையே பதிமூன்றாயிரம் தான். எனக்கு உடனே  'அந்த காலத்து' 1100 ஞாபகம் வந்துவிட்டது. பத்து வருடம் கழித்து இன்னமும் நல்லாவே வேலை செய்கிறது. அதில் டிங் டங் சத்தங்கள் கொண்ட ரிங்டோன்களை சொந்தமாக உருவாக்கியது எல்லாம் நினைவுக்கு வந்தது. இப்போது அதை யார் உபயோகிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? வீட்டு காயலாங்கடையான எங்க அப்பா தான். இப்படி ரொம்ப நாட்கள்...
முழுதும் படிக்க..

Jan 6, 2014

என்றென்றும் புன்னகை

இது வரை வெளிவந்த இந்திய மசாலா படங்களிலேயே நேர்த்தியான திரைக்கதை அமைப்பு, நல்ல கதை, கலைத்தன்மை, இசை எல்லாம் ஒருங்கே கூடிவந்த ஒரு படம் தில் சாஹ்தா ஹை (இந்தி). மேல் தட்டு நண்பர்களின் 'பேச்சிலர் வாழ்க்கை டு கல்யாணம்' காலக்கட்டத்தை காட்டும் படம். பல தடவை பார்த்தும் அலுதத்தில்லை. இப்படி ஒரு படம் தமிழில் வர வேண்டும் என்று ரொம்ப நாளாகவே காத்துக்கொண்டு இருக்கிறேன். அந்த எண்ணத்திற்கு பதைப்பை ஏற்படுத்தும் விதமாக தில் சாஹ்தா ஹை படத்தில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சீன்களை சுட ஆரம்பித்தனர் சிலர். ஆனால்,...
முழுதும் படிக்க..

Jan 5, 2014

GSLV மற்றும் மாவோ

இரண்டு செய்திகள். முதலாவது இந்தியா ஏவப்போகும் ஜிஎஸ்எல்வி. சொன்னதை அப்படியே கேட்கும் PSLV ராக்கெட் இந்தியாவிற்கு ஒரு வரப்பிரசாதம். ஆனால் PSLVயால் அதிக எடையை சுமக்க முடியாது. இரண்டு டன்னுக்கும் அதிகமான சுமையை தூக்கிச்செல்ல வலுவான ஒரு ராக்கெட் தேவை. அதை பூர்த்தி செய்யவே ஜிஎஸ்எல்வி உருவாக்கப்படுகிறது. ஆனால் கடந்த இரண்டு தடவையுமே ஜிஎஸ்எல்வி சிறிது மக்கர் செய்துவிட்டது. இந்தியா சொந்தமாக தயாரித்த சிக்கலான கிரையோஜெனிக் என்ஜின் ஜிஎஸ்எல்வி-யின் ஹைலைட். இந்த புதிய ராக்கெட்டை கொண்டுதான் சந்திராயன்-2...
முழுதும் படிக்க..

Jan 4, 2014

தூரம்

'வெளியூரில் இருந்து வர முடியாதவர்கள் பேஸ்புக் வழியாக இறுதி சடங்கை காண்கிறார்கள்' என்கிற தகவல் கவனத்தை ஈர்த்தது. டிவியில் கேட்டது. உடனே எனக்கு எனது தாத்தாவின் இறுதி தருணங்கள் நினைவுக்கு வந்தது. இரண்டாயிரம் வாக்கில் BSNL மற்றும் போஸ்டல் டிபார்ட்மெண்ட் வேலைநிறுத்தம் செய்திருந்த சமயம். திடீரென்று தாத்தாவுக்கு சீரியசாகி அவர் மகனுக்கு (என் அப்பா) தகவல் அளிக்க ஊரில் இருந்து பல்வேறு வழிகளில் முயல்கிறார்கள். எதிலும் பிடிக்கமுடியவில்லை. தாத்தா வேறு தன் மகனை பார்க்க வேண்டும் என்று ரொம்ப புலம்பியிருக்கிறார்....
முழுதும் படிக்க..

Jan 3, 2014

மறக்காத ஒரு கனவு

கதை சொல்வது போல் ஆரம்பமாகும் பாடல்கள் எப்போதுமே எளிதில் கவர்ந்து விடுகின்றன.  "ஒரு மலையோரம்  அங்கு கொஞ்சம் மேகம்,  அதன் அடிவாரம் ஒரு வீடு"  என்கிற அவன்-இவன் பாடல் மாதிரி. 'தற்செயலாக' இன்றும் 'ஒரு நாள் ஒரு கனவு, அதை மறக்கவும் முடியாது' பாடலை கேட்க வேண்டியதாகிவிட்டது. கண்ணுக்குள் நிலவு என்கிற ஃபாசில் படம். ஃபாசில் படம் என்றதும் மப்பும் மந்தாரமுமான மாலை மஞ்சள் நினைவுக்கு வருகிறதே, ஏன்? ஆனால் ஒன்று. குழந்தையின் கன்னம் போன்ற மென்மையை இசையில் வடித்தால் ஒரு நாள்...
முழுதும் படிக்க..

Jan 2, 2014

படித்த முதல் நாவல்

'நீங்கள் படித்த முதல் நாவல் எது?' என்கிற கேள்வி இன்று என்னை கவர்ந்தது. காரணம், யோசித்தாலும் அது எனக்கு சரியாக நினைவுக்கு வரவில்லை. குட்டிக்கதைகள், நீதிக்கதைகள், சிறுகதைகள் என்று சிறுவயதில் இருந்தே படித்தாலும் முதல் நெடுங்கதையை எப்போது படித்தேன், அது என்ன என்பது நினைவில் வர மறுத்தது. பள்ளி நாட்களில் பொன்னியின் செல்வனை கூட நாவலாக அல்லாமல் கல்கியில் தொடர்கதையாகவே படித்தேன். நினைவில் தட்டுபட்டபடி, முதல் நாவல் சிட்னி ஷெல்டனின் Master of the game என்று நினைக்கிறேன். வறுத்தெடுத்த ஒரு என்.சி.சி...
முழுதும் படிக்க..

Jan 1, 2014

கவர்ந்த விஷயம் - 365 நாள் பிராஜக்டு

365 நாள் பிராஜக்டுகள் என்றழைக்கப்படும் பதிவுகள் வலையில் ஏற்கனவே பிரபலம். ஏதாவது தலைப்பை தேர்ந்தெடுத்து, அது குறித்து தினம் ஒரு பதிவு போடுவது அதன் தார்ப்பாய் (தாத்பரியம்). அன்றன்றைய தினத்தில் 'கவர்ந்த விஷயம்' (கவி) ஒன்றை பற்றி எழுதலாம் என்று எனக்கு ஒரு எண்ணம். இந்த பிராஜக்ட் ஆரம்பிக்க ஒரு முக்கிய காரணம், ஜனவரி ஒன்று. வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கக்கூடிய 365 பிராஜக்டை கழுதைய புத்தாண்டு வந்து விட்டதே என்கிற காரணத்திற்காக நானும் ஆரம்பிக்கிறேன். எனக்கு தெரிந்து லதாமகனும், கருப்பையாவும்...
முழுதும் படிக்க..